“மனைவி என் பக்கம் இருந்தால் முழு உலகோடும் சண்டையிடுவேன்” - சாக்சி குறித்து தோனி உருக்கம்

தோனியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“மனைவி என் பக்கம் இருந்தால் முழு உலகோடும் சண்டையிடுவேன்” - சாக்சி குறித்து தோனி உருக்கம்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது மனைவி சாக்சி குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அழுத்தங்களை சமாளிக்க தனது மனைவி தரும் ஆதரவு மிகவும் முக்கியம் என்று தோனி தெரிவித்தார்.

Also Read
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி - சிறப்பு ரெயில்கள் இயக்கம்
“மனைவி என் பக்கம் இருந்தால் முழு உலகோடும் சண்டையிடுவேன்” - சாக்சி குறித்து தோனி உருக்கம்

இதுகுறித்து அவர் கூறுகையில், “என்னால் இந்த முழு உலகோடும் சண்டையிட முடியும். ஆயிரம் மன அழுத்தங்களையும் கையாள முடியும். ஆனால் அதற்கு என் மனைவி என் பக்கம் இருக்க வேண்டும்” என்று கூறினார். தோனியின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. இவர் இந்திய அணியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். மேலும் சிஎஸ்கே மூலமும் பல ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com