ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்...நடுவர்கள் பட்டியல் வெளியீடு...!

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

துபாய்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான நடுவர்கள் பட்டியலை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில் 16 பேர் நடுவர்களாகவும் (அம்பயர்கள்), 4 பேர் போட்டி நடுவர்களாகவும் (மேட்ச் ரெப்ரீ) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நடுவர்கள் விவரம் (அம்பயர்கள்) : கிறிஸ்டோபர் கேப்னி (நியூசிலாந்து), குமார் தர்மசேனா (இலங்கை), மரைஸ் எராஸ்மஸ் (தென் ஆப்பிரிக்கா), மைக்கேல் கோப் (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), பால் ரெய்பல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ (இங்கிலாந்து), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்), அஷான் ராசா (பாகிஸ்தான்), அட்ரெய்ன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா), ஷர்புத்துல்லா இப்னே ஷாஹித் (வங்காளதேசம்), பால் வில்சன் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ப் (இங்கிலாந்து), கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து).

போட்டி நடுவர்கள் (மேட்ச் ரெப்ரீ) : ஜெப் குரோவ் (நியூசிலாந்து), ஆண்டி பைக்ராப்ட் (ஜிம்பாப்வே), ரிச்சி ரிச்சர்ட்சன் (வெஸ்ட் இண்டீஸ்), ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா).

அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்திற்கு நிதின் மேனன் மற்றும் குமார் தர்மசேனா கள நடுவர்களாகவும், டிவி நடுவராக பால் வில்சனும், 4வது நடுவராக ஷர்புத்துல்லா இப்னே ஷாஹித்தும், போட்டி நடுவராக ஆண்டி பைக்ராப்டும் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com