சாம்பியனுக்கு ரூ.19.42 கோடி…மகளிர் டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு

இந்தத் தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெற உள்ளது.
சாம்பியனுக்கு ரூ.19.42 கோடி…மகளிர் டி20 உலகக் கோப்பை பரிசுத்தொகை அறிவிப்பு
Published on

சென்னை,

2026 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.73 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய சீசனை விட 10 சதவிகிதம் அதிகமாகும்.

சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.19.42 கோடி பரிசாக வழங்கப்படுகிறது. ரன்னர் அப் அணிக்கு ரூ.9.71 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிகளுக்கு தலா ரூ.5.60 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு இந்த முறை வழங்கப்படும் பரிசுத் தொகை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்தத் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஜூன் 12 முதல் ஜூலை 5, 2026 வரை நடைபெற உள்ளது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஜூன் 12ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடரின் தொடக்கப் போட்டியில், இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் எதிர்கொள்கிறது.

கடந்த 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்கா அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com