ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: அதிக முறை கோப்பையை வென்று இந்திய அணி உலக சாதனை


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி: அதிக முறை கோப்பையை வென்று இந்திய அணி உலக சாதனை
x

image courtesy: BCCI

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

துபாய்,

8 அணிகள் பங்கேற்றிருந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்வது இது 3-வது முறையாகும். இதன் மூலம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராயியை அதிக முறை வென்ற அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்திய அணி ஏற்கனவே 2002, 2013-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா (2 முறை) உள்ளது.


1 More update

Next Story