ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி மழையால் மீண்டும் பாதிப்பு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி மழையால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி மழையால் மீண்டும் பாதிப்பு
Published on

பிர்மிங்காம்,

இங்கிலாந்து நாட்டில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி ஆடியது. மழை குறுக்கிட்டதனை அடுத்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 319 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணி விளையாடியது.

அந்த அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மழை மீண்டும் குறுக்கிட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் அலி (12) மற்றும் ஷேசாத் (7) ரன்கள் எடுத்திருந்தனர். இந்த நிலையில் ஆட்டம் மீண்டும் மழையால் பாதிப்படைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com