ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் ராஜினாமா

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்
Image : AFP 
Image : AFP 
Published on

துபாய் ,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது

இந்த நிலையில்,சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் . இவர் 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com