20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 20 ஓவர் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
image courtesy: ICC via ANI
image courtesy: ICC via ANI
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), 20 ஓவர் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஐ.பி.எல். போட்டியில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் (906 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார். பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்திலும், கேப்டன் பாபர் அசாம் (755 புள்ளி) 3-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் (748 புள்ளி) 4-வது இடத்திலும், நியூசிலாந்தின் டிவான் கான்வே (745 புள்ளி) 5-வது இடத்திலும் உள்ளனர். விராட்கோலி 15-வது இடத்தில் தொடருகிறார்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான் (710 புள்ளி), பசல்ஹக் பரூக்கி (692 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் (690 புள்ளி), இலங்கையின் ஹசரங்கா (686 புள்ளி), தீக்ஷனா (684 புள்ளி) ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர். இந்திய பவுலர்கள் யாரும் டாப்-10 இடத்திற்குள் இல்லை. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 14-வது இடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com