ஐ.சி.சி. ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளருக்கு இடம்

image courtesy:PTI
ஆகஸ்ட் மாத சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இதில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி இந்தியாவின் முகமது சிராஜ், வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், நெதர்லாந்தின் ஐரிஸ் ஸ்வில்லிங் மற்றும் பாகிஸ்தானின் முனீபா அலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.






