ஐ.சி.சி. ஜூலை மாத சிறந்த வீரர் விருது: பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய கேப்டன் சுப்மன் கில்

ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.

இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அயர்லாந்தின் கேபி லூயிஸ், இங்கிலாந்தின் சோபியா டங்க்லி மற்றும் சோபி எக்லெஸ்டோன் இடம் பெற்றுள்ளனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com