ஐ.சி.சி. தரவரிசை: முதலிடம் பிடித்த கேசவ் மகராஜ் - பின்னடைவை சந்தித்த குல்தீப் யாதவ்


ஐ.சி.சி. தரவரிசை: முதலிடம் பிடித்த கேசவ் மகராஜ் - பின்னடைவை சந்தித்த குல்தீப் யாதவ்
x

Image Courtesy: @ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் கிரிக்கெட்டுக்கான (வீரர்கள் தரவரிசை) பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் கிரிக்கெட்டுக்கான (வீரர்கள் தரவரிசை) பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகராஜ் (687 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மகாராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார். இலங்கையின் மகேஷ் தீக்சனா (671 புள்ளி), இந்தியாவின் குல்தீப் யாதவ் (650 புள்ளி) ஆகியோர் தலா ஒரு இடங்கள் சரிந்து 2வது மற்றும் 3வது இடத்திற்கு வந்துள்ளனர்.

1 More update

Next Story