ஐசிசி தரவரிசை: இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி முன்னேற்றம்

ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
சென்னை,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் .வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் 2வது இடத்திலும் , இலங்கை வீரர் ஹசாரங்கா 3வது இடத்திலும் உள்ளனர்.
Related Tags :
Next Story






