ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியல்; தமிழகத்தை சேர்ந்த வருண் சக்ரவர்த்தி முதல் இடம் பிடித்து அசத்தல்

கோப்ப்புப்படம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆடவருக்கான டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி டி20 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் சர்மா (884 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட் (838 புள்ளி), ஜாஸ் பட்லர் (794 புள்ளி) தலா 1 இடங்கள் முன்னேறி 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளனர்.
இந்தியாவின் திலக் வர்மா (792 புள்ளி) 2 இடங்கள் சரிந்து 4வது இடத்திற்கு வந்துள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி (733 புள்ளி) 3 இடங்கள் உயர்ந்து முதல் இடத்திற்கு வந்துள்ளார். நியூசிலாந்தின் ஜேக்கப் டபி (717 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2வது இடத்திற்கு வந்துள்ளார். வெஸ்ட் இண்டீசின் அஹேல் ஹொசைன் (707 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார்.
டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா (237 புள்ளி) முதல் இடத்திலும், ஆப்கானிஸ்தானின் முகமது நபி (213 புள்ளி) 2வது இடத்திலும் உள்ளனர். ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (210 புள்ளி) ஒரு இடம் உயர்ந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளார்.






