ஐ.சி.சி.தொடர்கள்: அவர்களை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள விரும்பவில்லை - குல்தீப் யாதவ்


ஐ.சி.சி.தொடர்கள்: அவர்களை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ள விரும்பவில்லை - குல்தீப் யாதவ்
x

image courtesy:PTI

தினத்தந்தி 29 March 2025 5:09 PM IST (Updated: 29 March 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.

மும்பை,

அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இதில் கோப்பையை வென்றதை காட்டிலும் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதே இந்திய ரசிகர்களுக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.

ஏனெனில் கடந்த ஐ.சி.சி. தொடர்களான ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம், வென்றது. அத்துடன் சமீபத்தில் முடிவடைந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்த தோல்விகளுக்கு சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி வெற்றி மூலம் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள நாங்கள் விரும்பவில்லை என்று இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். மாறாக அவர்களை அரையிறுதியில் எதிர்கொள்வதையே இந்தியா விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- " ஐ.சி.சி. தொடர்களில் நாங்கள் ஆஸ்திரேலியாவை அரையிறுதியில் எதிர்கொள்ளவே விரும்புகிறோம். இறுதிப்போட்டியில் அவர்களுடன் விளையாட விரும்பவில்லை. அது முற்றிலும் மாறுபட்ட அழுத்தம். இறுதிப்போட்டியில் விளையாடுவதை விட அரையிறுதியில் அவர்களை விளையாடுவது மிகவும் நல்லது" என்று கூறினார்.

1 More update

Next Story