ஐ.சி.சி. சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது 2024: பரிந்துரை பட்டியலில் ஒரு இந்திய வீரர்

2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐ.சி.சி. 4 பெயர்களை பரிந்துரைத்துள்ளது.
image courtesy: AFP
image courtesy: AFP
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் டி20 கிரிக்கெட்டில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு அவர்களுக்கு 'சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது.

அதன்படி இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், பாகிஸ்தான் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம், ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோரை பரிந்துரைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com