ஐ.சி.சி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் அடில் ரஷித்

Image Courtesy: @ICC
சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ளது.
துபாய்,
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாஸ் பட்லர் ஒரு இடம் முன்னேறி 5-ம் இடத்தை பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலைப் பொறுத்தமட்டில் நியூசிலாந்தின் ஜேக்கப் டபி முதலிடத்தில் நீடிக்கும் நிலையில், இங்கிலாந்தின் அடில் ரஷித் 2 இடங்கள் முன்னேறி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்திய அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி 3ம் இடத்திலும், ரவி பிஷ்னோய் 7ம் இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 10ம் இடத்திலும் நீடித்து வருகின்றனர். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா முதலிடத்தில் நீடிக்கிறார்.






