ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்


ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பேட்டிங்கில் இந்திய வீராங்கனை முதலிடம்
x

image courtesy:PTI

முதலிடத்தில் இருந்த லாரா வால்வார்ட் 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

துபாய்,

சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த லாரா வால்வார்ட் 19 புள்ளிகளை இழந்து 2-வது இடத்திற்கு சரிந்துள்ளார். இவர் இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் உடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.

இதன் காரணமாக சமீபத்திய போட்டிகளில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்து வரும் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்த தரவரிசையில் டா 10 இடங்களில் உள்ள ஒரே இந்திய வீராங்கனை இவர் ஆவார்.

1 More update

Next Story