

லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
அதன்படி, மான்செஸ்டர் மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் மோத உள்ளன.
இதே மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
பின்னர், சவுத்ஹாம்டன் மைதானத்தில் இரவு 11 மணிக்கு தொடங்கும் 4வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஒரே நாளில் 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இப்போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.