ஐ.சி.சி. பெண்கள் உலக கோப்பை தகுதி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பட்டம் வென்றது

ஐ.சி.சி. பெண்கள் உலக கோப்பை தகுதி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பட்டம் வென்றது.
ஐ.சி.சி. பெண்கள் உலக கோப்பை தகுதி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பட்டம் வென்றது
Published on

கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் சாரா ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான ஐ.சி.சி. பெண்கள் உலக கோப்பை தகுதி சாம்பியன்ஷிப்பிற்கான இறுதி போட்டி இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளான லீ (37) மற்றும் உல்வார்ட் (21) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் பிரீஸ் (40), செட்டி (22), டிரையான் (23), நீகெர்க் (37), கப் (14), லூவஸ் (35), இஸ்மாயில் (5), ககா (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். லெட்சோவாலோ (3) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில் அந்த அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது.

இதனால் இந்திய அணிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பின் விளையாடிய இந்திய அணியில் மேஷ்ரம் (59) மற்றும் டி.பி. சர்மா (71) ரன்கள் எடுத்து அணிக்கு வலிமை சேர்த்தனர்.

இந்தியாவின் வி. கிருஷ்ணமூர்த்தி (31), காமினி (10), பாண்டே (12), பூனம் யாதவ் (7) மற்றும் பிஷ்த் (6) ரன்கள் எடுத்தனர். வைத்யா மற்றும் வர்மா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். கெய்க்வாட் (0) மற்றும் கவுர் (41) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வெற்றி பெற்று பட்டத்தினையும் வென்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com