அவர் அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய பந்துவீச்சை அடிக்கட்டும்... அதுதான் எங்களுடைய திட்டம் - ஹர்திக் பாண்ட்யா

நான் பேசுவதை அவர் கேட்டுக்கொண்டு அடுத்த போட்டியில் எனது பந்துவீச்சுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைக்கிறேன்.
Image Courtesy: Twitter
Image Courtesy: Twitter
Published on

கயானா,

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த 160 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவின் அதிரடி ஆட்டத்தால் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது,

அடுத்த மூன்று போட்டிகள் மிகவும் த்ரில்லிங்காக இருக்கப்போகிறது என்று நாங்கள் பேசிக் கொண்டோம். அதோடு இரண்டு வெற்றியோ அல்லது இரண்டு தோல்வியோ எங்களது திட்டத்தில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.

நாங்கள் கட்டாயம் ஜெயிக்க வேண்டிய போட்டிகளில் ரெடியாக இருக்கிறோம் என்பதை இந்த போட்டியின் மூலம் காண்பித்துள்ளதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் விரைவாக பேட்டிங் செய்ய வராதது எங்களது வேகப்பந்து வீச்சாளர்களை தக்க வைக்க முடிந்தது. அதோடு சுழற்பந்து வீச்சாளரகளையும் அதற்குள் நாங்கள் பயன்படுத்தி விட்டோம்.

பூரன் அடிக்க வேண்டும் என்றால் என்னுடைய பந்துவீச்சை அடிக்கட்டும் அதுதான் எங்களுடைய திட்டம். நான் இதுபோன்ற சவால்களை மிகவும் விரும்புகிறேன். நிச்சயம் நான் பேசுவதை அவர் கேட்டுக்கொண்டு அடுத்த போட்டியில் எனது பந்துவீச்சுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நினைக்கிறேன்.

இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. இது போன்ற போட்டிகளில் சூர்யகுமார் விளையாடும் விதம் தான் மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com