’நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்...’ காத்திருக்கும் பல சாதனைகள்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன.
’நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால்...’ காத்திருக்கும் பல சாதனைகள்
Published on

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பை போட்டியை நடத்திய நாடு இதுவரை சாம்பியன் பட்டம் வென்றது கிடையாது. மேலும் எந்த அணியும் 3 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது இல்லை.

இந்த 2 சாதனையும் படைக்கும் ஆர்வத்தில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் இதுவரை அதிகபட்சமாக தலா 2 முறை 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளன. தற்போது இந்தியா 3-வது தடவையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுவரை நடப்பு சாம்பியன் இறுதிப்போட்டிக்கு வந்தது இல்லை. முதல் முறையாக இந்திய அணி அந்த பெருமையை பெற்றுள்ளது. இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18-ல் இந்தியாவும், 11-ல் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவு இல்லை. டி20 உலகக் கோப்பை போட்டியில் இரு அணிகளும் மோதிய 3 ஆட்டத்திலும் நியூசிலாந்தே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com