சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானில் இருந்திருந்தால் அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது - பாக். முன்னாள் வீரர்

சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தானில் இருந்திருந்தால் அணியில் வாய்ப்பே கிடைத்திருக்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ். சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வெறும் ஓராண்டில் வளர்ந்துள்ளார் யாதவ். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய அவர் இந்திய அணியின் 360 டிகிரி என அன்புடன் அழைக்கப்படுகிறாட்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் கடைசி ஆட்டத்தில் சதம் விளாசி ஆட்டத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 1500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு (4 சதங்கள்) அடுத்து 2-வது இடத்தில் இவர் உள்ளார்.

விரைவில் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துவிடுவார் என எதிர் பார்க்கபடுகிறது. 30 வயதில் இந்திய அணியில் முதல் முறையாக ஆட வாய்ப்பு பெற்றார். அதன்பின்னர் இந்த 2 ஆண்டில் மிகப்பெரிய வீரராக வளர்ந்திருக்கிறார்.

இந்நிலையில், சூர்யகுமார் யாதவை வைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும், அமைப்பையும் சல்மான் பட் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து சல்மான் பட் பேசியதாவது:-

சூர்யகுமார் யாதவ் 30 வயதுக்கு மேல் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவே தொடங்கினார் என படித்திருக்கிறேன். நல்வாய்ப்பாக சூர்யகுமார் யாதவ் இந்தியராக பிறந்துவிட்டார். ஒருவேளை அவர் பாகிஸ்தானியராக இருந்திருந்தால், 30 வயதுக்கு மேல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பே பெற்றிருக்கமாட்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா இருந்தபோது 30 வயதுக்கு மேல் எந்த வீரரும் அறிமுகமாக முடியாது என்ற விதியை வகுத்திருந்தார். என்று சல்மான் பட் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை கடுமையாக விமர்சித்தார்.

மேலும், அணியில் இருப்பவர்கள் நலமாக இருக்கிறார்கள். அணியில் இல்லாதவர்களுக்கு வாய்ப்பு இல்லை. சூர்யகுமார் 30 வயதில் அணிக்குள் நுழைந்தார். எனவே, அவரது வழக்கு வேறு என்றார். உடற்தகுதி, பேட்டிங் முறை மற்றும் பேட்டிங் முதிர்ச்சி... பந்து வீச்சாளர்கள் என்ன பந்து வீசப் போகிறார்கள் என்பது அவருக்கு முன்பே தெரியும் போல என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com