எங்களை விட இந்திய அணிக்கே அதிக நெருக்கடி: வங்காளதேச கேப்டன் மோர்டசா

எங்களை விட இந்திய அணிக்கே அதிக நெருக்கடி என்று வங்காளதேச கேப்டன் மோர்டசா தெரிவித்துள்ளார்.
எங்களை விட இந்திய அணிக்கே அதிக நெருக்கடி: வங்காளதேச கேப்டன் மோர்டசா
Published on

பர்கிங்ஹாம்,

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று பர்கிங்ஹாம் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு சாம்பியன் இந்தியாவும்- வங்காளதேச அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வங்காளதேச அணியும் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து கருத்து தெரிவித்த வங்காளதேச அணி கேப்டன் மோர்டசா, இந்திய அணிக்கே அதிக நெருக்கடி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- நெருக்கடியை பற்றி பேசினால், எங்களை விட இந்தியாவுக்கே நெருக்கடி அதிகம் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். கிரிக்கெட் விரும்புவோரும் ஏராளமானோர் இருக்கிறார்கள். வங்காளதேசத்திலும் அப்படி தான். இரு அணிகளுக்கும் நிறைய எதிர்பார்ப்பு உண்டு. இந்த ஆட்டம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. எங்களது முதல் பணி, ரிலாக்சாக ஆடுவது தான்.என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com