கேரளாவில் இருந்து இங்கு வந்தால்.. சஞ்சு சாம்சனை கலாய்த்த சிவகார்த்திகேயன்

கேரளாவை சேர்ந்தவரும் சிஎஸ்கே வீரருமான சஞ்சு சாம்சனிடம் சிவகார்த்திகேயனிடம் கலந்துரையாடினார்.
கேரளாவில் இருந்து இங்கு வந்தால்.. சஞ்சு சாம்சனை கலாய்த்த சிவகார்த்திகேயன்
Published on

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 30-ந்தேதி கவுகாத்தியில் சந்திக்கிறது. இதையொட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களை சந்தித்து மகிழ்விக்க சி.எஸ்.கே. சார்பில் 'ரோர்26' என்ற பெய ரில் மெகா ரசிகர்கள் திருவிழா சேப்பாக்கத்தில் நேற்று அரங்கேறியது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களுடன் தற்போதைய வீரர்களின் பயிற்சி, ஏஆர் ரஹ்மானின் இசை கச்சேரி நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார். அப்போது சிவகார்த்திகேயன், கேரளாவை சேர்ந்தவரும் சிஎஸ்கே வீரருமான சஞ்சு சாம்சனிடம் சிவகார்த்திகேயனிடம் கலந்துரையாடினார். அப்போது தனக்கே உரிய பாணியில் சிவகார்த்திகேயன் நகைச்சுவையாக பேசினார். சஞ்சு சாம்சனிடம் சிவகார்த்திகேயன் கூறியதாவது: கேரளாவில் இருந்து இங்கே வரும் மலையாள படங்கள் ஹிட் ஆகிவருகின்றன. கேரளாவில் இருந்து வரும் ஹீரோயின்கள் சூப்பர் ஹிட் ஆகிறார்கள். இப்போ கேரளாவில் வரும் கிரிக்கெட் வீரரான நீங்கள் பிளாக்பஸ்டர் ஆகிவிட்டீர்கள். அடிபொலி” என்றார்.. சிவகார்த்திகேயன் மலையாளத்தில் இதனையே பேச சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் தோனி உள்ளிட்டோர் இதனை கேட்டு சிரித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com