திருமணம் குறித்து பாபர் ஆசம் - ரிஸ்வான் இடையே நடந்த ஜாலியான உரையாடல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் ஆசம் நவீன கிரிக்கெட்டின் சிறப்பான வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார்.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான பாபர் ஆசம் நவீன கிரிக்கெட்டின் சிறப்பான வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சில காலத்திலேயே பல சாதனைகளை பாபர் ஆசம் படைத்து வருகிறார். இந்த நிலையில் கேப்டனாக இருந்த பாபர் ஆசம் தற்போது அந்தப் பதவியில் இருந்து விலகி வீரராக விளையாடி வருகிறார். 29 வயதான அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் ஒரு நிகழ்வின்போது அவருடைய நண்பரும் பிரபல கிரிக்கெட் வீரருமான முகமது ரிஸ்வான், 'நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று பாபரிடம் கேள்வி கேட்டார்'.

இதற்கு பதில் அளித்த பாபர் ஆசம், 'எனக்கு தெரியும் நீங்கள் இந்த கேள்வியை தொடர்ந்து கேட்பீர்கள்' என்று கூறினார்.

அதற்கு பதில் அளித்த ரிஸ்வான், 'அது சரி தற்போது நான் இந்த கேள்வியை கேட்டு விட்டேன். இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என்று கூறினார்.

அதற்கு பாபர் ஆசம், 'இதற்கான பதிலை நான் உன்னிடம் தனிப்பட்ட முறையில் புரிய வைக்கிறேன்' என்று கூறினார்.

இதற்கு 'இல்லை முடியாது என்னுடைய மனைவி எப்போதுமே இந்த கேள்வியை கேட்கிறார். நான் காலையில் எழுந்த உடனே பாபர் ஆசம் எப்போது திருமணம் செய்து கொள்வார் என்று கேட்டு வருகிறார்' என்று ரிஸ்வான் தெரிவித்தார்.

அதற்கு பதில் அளித்த பாபர் ஆசம், 'இப்போது எல்லாம் நான் காலையில் எழுந்திருக்கும்போது நான் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டதாக இணையதளம் மூலம் அறிகிறேன். உடனே ரசிகர்கள் என்னை வாழ்த்துகிறார்கள். திடீரென்று மாலையில் நான் வேறு யாரையோ திருமணம் செய்துகொண்டேன் என்று செய்திகள் வருகின்றன. அதற்கும் மக்கள் என்னை வாழ்த்துகிறார்கள். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. எனவே இதை தவிர வேறு ஏதாவது கேள்வி இருந்தால் கேளு' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com