பல பெண்களுடன் சாட்டிங் : மன்னிப்பு கேட்ட இமாம் உல் ஹக்

பிரபல பாகிஸ்தான் இளம் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் பேசிய சாட்டிங் இணையத்தில் கசிந்தது. இதற்கு அவர் மன்னிப்பு கோரி உள்ளார்.
பல பெண்களுடன் சாட்டிங் : மன்னிப்பு கேட்ட இமாம் உல் ஹக்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் அணி உலகக்கோப்பையை விட்டு வெளியேறினாலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இமாம் உல் ஹக்கின் ஆட்டம் அனைத்து பாகிஸ்தான் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார் இமாம். ஆனால் அவர் ஒருசில பெண்களுடன் சாட்டிங் செய்த ஸ்கிரீன் ஷாட்டுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஸ்கிரீன் ஷாட்டுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்கள் அவரை கேலி செய்தனர்.

இமாம் உல் ஹக்கிற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு, இமாம் எந்த பதிலும் கூறாமல் இருந்தார். இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குனர் வாசிம் கான், இமாம் உல் ஹக்கிடம் பேசினார். அப்போது அவர் மன்னிப்பு கேட்டதாக வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, இது இமாமின் தனிப்பட்ட விவகாரமாக இருந்தாலும் வீரர்கள் ஒழுக்கத்தையும், நெறிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாட்டுக்காக விளையாடும் போது அவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என நம்புகிறோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com