நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ‘மாஸ்டர் பிளான்’…அணியில் மாற்றமா?

இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ‘மாஸ்டர் பிளான்’…அணியில் மாற்றமா?
Published on

சென்னை,

டி20 உலகக் கோப்பை 2026 தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்திய அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி அரையிறுதிப் போட்டியில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இங்கிலாந்துக்கு எதிராக அவர் வீசிய 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். இது அவரது டி20 கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த ஓவர்களில் ஒன்றாக அமைந்தது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லரை ஒரு முக்கிய கட்டத்தில் அவர் அவுட் செய்திருந்தாலும், மற்ற பேட்ஸ்மேன்கள் அவர் வீசிய பந்தை சிதறடித்தனர்.

Also Read
“2022, 2024 இப்போது 2026-லும்....அதே கதை மீண்டும் எழுதப்படுமா? - சாம்பியன் ஆகுமா இந்தியா?
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ‘மாஸ்டர் பிளான்’…அணியில் மாற்றமா?

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த முக்கியமான போட்டிக்கு முன் அணித் நிர்வாகம், பிளேயிங் லெவனில் மாற்றங்களை செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதல் ஆல்-ரவுண்டரை அணியில் சேர்க்க பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com