பரபரப்பான சூழலில் இந்தியா ஏ - ஆஸி.ஏ 2-வது டெஸ்ட்


பரபரப்பான சூழலில் இந்தியா ஏ - ஆஸி.ஏ 2-வது டெஸ்ட்
x

image courtesy:PTI

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ 2-வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.

லக்னோ,

ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற போட்டிகள்) போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி அணி முதல் இன்னிங்சில் 420 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய ஏ அணி 194 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா ஏ தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 75 ரன் எடுத்தார். ஆஸ்திரேலியா ஏ தரப்பில் தோர்ன்டன் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 226 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய ஏ அணி 185 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் இந்தியா ஏ அணிக்கு 412 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. சாய் சுதர்சன் (44 ரன்), மானவ் சுதர் (1 ரன்) களத்தில் உள்ளனர். கே.எல். ராகுல் 74 ரன்னில் காயத்தால் வெளியேறினார்.

இந்தியா வெற்றி பெற இன்னும் 243 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய பரபரப்பான சூழலில் இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

1 More update

Next Story