இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலிய கேப்டன்


இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் - ஆஸ்திரேலிய கேப்டன்
x

Image Courtesy: @ICC

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

பெங்களூரு,

8 அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் இந்தியாவின் நவி மும்பை, குவாஹாட்டி, இந்தூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய 4 நகரங்களிலும், இலங்கையின் கொழும்புவிலும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்துப் போட்டிகளும் கொழும்புவில் நடைபெறுகின்றன.

உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடர் குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி சில கருத்துகளை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, மஞ்சள் நிறமாக தோனியின் சி.எஸ்.கே ஜெர்ஸியை இந்திய ரசிகர்கள் அணிந்து வந்தால் எனக்கு பிடிக்கும். அது மிகவும் சிறப்பாக இருக்கும். கூட்டத்தில் மஞ்சள் நிறமும் இருந்தால் நன்றாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான அணியாக எங்களை முத்திரைக் குத்தியுள்ளீர்கள். அதற்கு நன்றி. இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம். இதுவரை விளையாடியதிலேயே மிகப்பெரிய உலகக் கோப்பையாக இருக்கும்.

இங்கு நல்ல ஆதரவும், மிகையான மனநிறைவும் கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் இந்த கலாசாரம் கிடையாது. நாங்கள் தோற்கும்போது எழுதுவார்கள். அதனால், இந்தியாவில் நல்ல அனுபவம். குழுவாக நல்ல அணியாக இருக்கிறோம். எங்களால் முடிந்த உழைப்பைக் கொடுத்து விளையாடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story