‘பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை மாற்றும்படி இந்தியா கேட்கவில்லை’ - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம்

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியை மாற்றும்படி இந்தியா கேட்கவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சிட்னி,

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. பிரிஸ்பேன் நகரை உள்ளடக்கிய குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால் வீரர்கள் மைதானம், ஓட்டலை தவிர வேறு எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடுமையாக இருப்பதால் பிரிஸ்பேன் சென்று விளையாட இந்திய அணி வீரர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதனால் இந்த போட்டி வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்றும் ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.

இதற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து வாரியத்தின் தற்காலிக தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறுகையில், எங்களுடைய கொரோனா தடுப்பு திட்டங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முழுமையான ஆதரவு அளித்து வருகிறது. இதனை தவிர்த்து வேறு எந்த முறைப்படியான தகவலும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எங்களுக்கு வரவில்லை. இங்குள்ள நிலவரங்கள் குறித்து தினசரி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து வருகிறோம். நாங்கள் நிர்ணயித்துள்ள அட்டவணையின் படி விளையாட இரு அணிகளும் விரும்புகின்றன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com