உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

கவுகாத்தியில் இன்று நடைபெறும் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோத உள்ளன.
உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
Published on

கவுகாத்தி,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. கவுகாத்தியில் இன்று (சனிக்கிழமை) நடக்கும் பயிற்சி ஆட்டம் ஒன்றில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் அணியில் உள்ள 15 வீரர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. கடைசி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்ட இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் பந்து வீச்சை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கும்.

இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட 38 மணி நேரம் பயணமாக லண்டனில் இருந்து துபாய் வழியாக மும்பையை அடைந்து அங்கிருந்து கவுகாத்திக்கு வந்து சேர்ந்துள்ளது. ஜேசன் ராய் காயத்தால் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இடம் பெற்றுள்ள இளம் பேட்ஸ்மேன் ஹாரி புரூக்கின் பேட்டிங்கை அந்த அணி நிர்வாகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இதேபோல் மற்ற பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை சமாளிக்க இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள தீவிரம் காட்டுவார்கள்.

பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, 2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. திருவனந்தபுரத்தில் நடக்கும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் (பிற்பகல் 2 மணி) சந்திக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com