இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர்: இம்பேக்ட் பீல்டர் விருதை வென்ற வீராங்கனை யார் தெரியுமா..?

image courtesy:twitter/@BCCIWomen
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.
பர்மிங்காம்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி தொடரை கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த தொடரில் இம்பேக்ட் பீல்டராக ராதா யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா வழங்கினார்.
Related Tags :
Next Story






