வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 184 ரன்கள் குவிப்பு

வங்காளதேசஅணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் குவித்தது.
வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 184 ரன்கள் குவிப்பு
Published on

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்று முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முடிவில் வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 184 ரன்கள் குவித்துள்ளது. அலெய்டில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவுல் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. வங்காளதேசஅணிக்கு 185 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 64, ராகுல் 50, சூர்யாகுமார் யாதவ் 30 ரன்கள் சேர்த்தனர்.

வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் அடித்தார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் கோலியின் 3வது அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com