

சென்னை,
2026 டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், 2026 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய வீரர்களின் தனிப்பட்ட திறமை, தற்போதைய பார்ம், போட்டிக்கான பிட்னஸ், சமீப காலங்களில் அவர்கள் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளின் அளவு ஆகியவை அவர்களைத் தெளிவான வெற்றி வாய்ப்புள்ள அணியாக ஆக்குகின்றன. குறிப்பாக, அவர்களின் முன்னணி பேட்டிங் வரிசையையும் அவர்கள் இருக்கும் சிறப்பான ஆட்ட நிலையையும் குறிப்பாக, அவர்களின் முன்னணி பேட்டிங் வரிசையையும் அவர்கள் இருக்கும் சிறப்பான ஆட்ட நிலையையும் பார்க்கும்போது இது உறுதியாகிறது.எனத் தெரிவித்துள்ளார்.