

லண்டன்,
10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் வருகிற ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு என முன்னாள் வீராங்கனை அஞ்சும் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து சூழ்நிலைகள் அந்நியமானவைகள் அல்ல. சில அல்லது பெரும்பாலான இந்திய வீராங்கனைகள் இங்கிலாந்தில் விளையாடி இருக்கிறார்கள். நந்தினி சர்மா இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார். குறைந்த போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஸ்ரீ சாரணி, கடந்த 12 மாதத்திற்குள் 2-வது முறையாக இங்கிலாந்து சென்றுள்ளார்.என்னைப் பொறுத்தவரையில், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பான அணிகளில் ஒன்று. டாப் 4 அணிகளில் ஒன்று என்பது மட்டுமல்ல, டாப் 2 அதன்பின் சாம்பியன் என்பதை விரும்புகிறேன்.என தெரிவித்துள்ளார்.