தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா பேட்டிங் தேர்வு
Published on

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்திலும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டது. இதனால் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற உள்ளது.

இப்போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட் (கீப்பர்), அஸ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, பும்ரா, உமேஷ் யாதவ்.

தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர் (கேப்டன்) , மார்க்ராம், கீகன் பீட்டர்சன், வான்டெர் துஸ்சென், தெம்பா பவுமா, கைல் வெரைன் (கீப்ப்பர்), மார்கோ ஜான்சென், காஜிசோ ரபடா, கேஷவ் மகராஜ், டுவைன் ஒலிவியர், லுங்கி இங்கிடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com