தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா..2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்...!

நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
Image Courtesy: @BCCI
Image Courtesy: @BCCI
Published on

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், தொடரை இழக்காமல் இருக்க கட்டாயம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியும் ஆட உள்ளதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com