இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் அறிவிப்பு


இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் அறிவிப்பு
x

image courtesy:twitter/@ICC

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி நடைபெறும் ஆடுகளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இதனையடுத்து நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் துபாயில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்நிலையில் இந்த போட்டி நடைபெறும் ஆடுகளம் அறிவிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆடுகளமே இறுதிப்போட்டிக்கும் தேர்வு செய்யப்ட்டுள்ளது.

முன்னதாக இந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றிருந்தது. விராட் கோலி சதமடித்து கம்பேக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story