

கொழும்பு,
10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 27வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெறும் என்பதால் ரசிகர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.