டெல்லி டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்ப்பு

டெல்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி டெஸ்ட்: 3 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்ப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 371 ரன்கள் குவித்தது. 2 ஆம் நாள் ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ரன்மழை பொழிந்தது.

கேப்டன் விராட் கோலியின் இரட்டை சதத்தின் (243 ரன்கள்), உதவியால் இந்திய அணி, 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்திருந்த போது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். 600 ரன்களை நெருங்கும் போதே இந்திய அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலியின் அதிரடி முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்போது விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். அடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. 2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 57 ரன்களுடனும் (118 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), சன்டிமால் 25 ரன்களுடனும் (81 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.

3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. முந்தைய போட்டிகளைப்போல் இல்லாமல், இன்று இலங்கை பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆடினர். இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் மேத்யூஸ் (111 ரன்கள்), கேப்டன் சண்டிமால் ஆகியோரின் சதத்தின் உதவியால் இலங்கை அணி 350 ரன்களுக்கு மேல் சேர்த்தது. ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சண்டிமால் நிலைத்து நின்றார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 130 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியைவிட இலங்கை அணி இன்னும் 180 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா, இஷாந்த் ஷர்மா, முகம்மது சமி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இலங்கை அணி தரப்பில் சண்டிமால் 147 ரன்களுடனும் கமேஜ் ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com