இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடக்கும் என ஐ.சி.சி தெரிவித்து உள்ளது. #ICC #SAvIND
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3 வது டெஸ்ட் தொடர்ந்து நடக்கும் ஐ.சி.சி
Published on

ஜோகன்னஸ்பர்க்,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 187 ரன்னிலும், தென்ஆப்பிரிக்கா 194 ரன்களிலும் சுருண்டன. 7 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன் எடுத்திருந்தது. முரளிவிஜய் (13 ரன்), லோகேஷ் ராகுல் (16 ரன்) களத்தில் இருந்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது . இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 8.3 ஓவர்களில் மார்க்ராமின் (4 ரன்) விக்கெட்டை இழந்து 17 ரன்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் (11 ரன்), அம்லா (2 ரன்) களத்தில் நிற்கிறார்கள். பும்ரா வீசிய பந்து டீன் எல்கரின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியதால், அந்த ஓவர் நிறைவு பெறாமலேயே 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் இன்று ஆட்டம் நடக்குமா என்ற கேள்விக்கு ஐ.சி.சி பதில் அளித்துள்ளது.

இது குறித்து ஐ.சி.சி இணைய தளத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஆட்ட நடுவர்கள், போட்டியின் நடுவர் இரு அணி கேப்டன்கள், பட்ஸ்மேன் ஆகியோருடன் உரையாடிய பிறகு, ஜோகன்ஸ்பர்க் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிட்சின் கண்டிஷன் குறித்து நடுவர்கள் தொடர்ந்து கவனித்து வருவர். பிட்ச் மேலும் மோசமடைந்தால் அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com