கடும் பனிமூட்டம்: இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து


கடும் பனிமூட்டம்:  இந்தியா - தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து
x

லக்னோவில் பனிமூட்டம் கடுமையாக இருந்தது.

லக்னோ,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், நியூ சண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. தர்மசாலாவில் நடந்த 3-வது ஆட்டத்தில் மீண்டும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடைபெற இருந்தது.

இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. லக்னோவில் கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

சில மணி நேரங்கள் காத்திருந்து நடுவர்கள் ஆய்வு செய்தனர். ஆனாலும் பனிமூட்டம் கடுமையாக இருந்தது.இதனால் போட்டி ரத்து செயப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5வது போட்டி வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது.

1 More update

Next Story