இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய யு-19 அணி அறிவிப்பு.. ஆயுஷ் மாத்ரே கேப்டன்

image courtesy: BCCI
14-வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் இடமளிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
இந்திய யு-19 (19-வயதுக்குட்பட்டோர்) கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 4 நாட்கள் போட்டிகள் ( Multi Day matches) கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. அதற்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய ஆயுஷ் மாத்ரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷிக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மவுல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன்), ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சவுஹான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்.
போட்டி தொடர் அட்டவணை:
1. பயிற்சி ஆட்டம் - ஜூன் 24
2. முதல் ஒருநாள் போட்டி - ஜூன் 27
3. 2-வது ஒருநாள் போட்டி - ஜூன் 30
4. 3-வது ஒருநாள் போட்டி - ஜூலை 2
5. 4-வது ஒருநாள் போட்டி - ஜூலை 5
6. 5-வது ஒருநாள் போட்டி - ஜூலை 7
7. முதல் 4 நாள் போட்டி - ஜூலை 12-15
8. 2-வது 4 நாள் போட்டி - ஜூலை 20-23






