இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட்: மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்


இந்தியா - வங்காளதேசம் டெஸ்ட்: மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
x
தினத்தந்தி 28 Sept 2024 11:16 AM IST (Updated: 28 Sept 2024 11:23 AM IST)
t-max-icont-min-icon

இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று தொடங்கியது.

கான்பூர்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்வதன் காரணமாக முதல் நாள் ஆட்டம் இதோடு ரத்து செய்யப்பட்டது.முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.இதனையடுத்து நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது .

இந்த நிலையில் இன்று காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் 2வது நாள் ஆட்டமும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story