ஆசிய கோப்பை; ரோகித்தா...கோலியா...உங்களுக்கு பிடித்த விக்கெட் எது..? - ஷாகின் அப்ரிடி அளித்த பதில்

இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரோகித் மற்றும் கோலியை ஷாகின் அப்ரிடி அவுட் ஆக்கினார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

பல்லாகெலெ,

ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவரகளில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 266 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், பாண்ட்யா இணை அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் இஷான் கிஷன் 82 ரன்னிலும், பாண்ட்யா 87 ரன்னிலும் அவுட் ஆகினர். இவர்களது பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா 266 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து பாகிஸ்தான் தனது இன்னிங்சை தொடங்குவதற்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் மிக முக்கிய விக்கெட்டுகளான ரோகித் மற்றும் கோலியை ஷாகின் அப்ரிடி போல்டாக்கினார். இதையடுத்து ஷாகின் அப்ரிடியிடம் ரோகித் அல்லது கோலி இருவருடையை விக்கெட்டில் உங்களுக்கு பிடித்த விக்கெட் எது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஷாகின் அப்ரிடி கூறியதாவது,

இருவரும் (விராட் மற்றும் ரோஹித்) முக்கியமான விக்கெட்டுகள் என்று நினைக்கிறேன். அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒன்று தான். ஆனால் ரோகித் சர்மாவின் விக்கெட் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களின் திட்டங்கள் வேலை செய்தன. நசீம் மணிக்கு 150 கிமீ வேகத்தில் பந்துவீசுகிறார். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மிகவும் வேகமாக வீசுகிறார்.

புதிய பந்தில் ஸ்விங் இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு எதுவும் இல்லை. பந்து பழையதாகிவிட்டால் ரன்கள் எடுப்பது எளிதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com