

செஞ்சூரியன்,
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.
டர்பனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி செஞ்சூரியன் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்தியா தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்யுமாறு பணித்தது.
இதனை அடுத்து பேட்டிங்கை தொடங்கி விளையாடி தென் ஆப்பிரிக்காவிற்கு இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் சவாலாக இருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி 32.2 ஓவர்களில் 118 ரன்களில் ஆல்-அவுட் ஆகி இந்தியாவிற்கு 119 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
இதனையடுத்து 119 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்திய அணியில் ரோகித் சர்மா 15 ரன்களில் அவுட் ஆனார். விராட் கோலியும், தவானும் தென் ஆப்பிரிக்காவின் வெற்றி இலக்கை தகர்த்தனர். இந்தியா 20.3 ஓவர்களில் 119 ரன்களை அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இறுதியாக விராட் கோலி 46 ரன்களுடனும், ஷிகர் தவான் 51 ரன்களுடனும் இறுதியில் களத்தில் நின்றனர். 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது.