

சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், இந்த போட்டியில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு;
* டி 20 உலக கோப்பை அரங்கில் இந்திய அணி தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் 2007ல் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 218/4 ரன் எடுத்ததே அதிகம்.
* டி-20 உலக கோப்பை வரலாற்றில் பதிவான 2வது அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணி நேற்று பதிவு செய்துள்ளது. ஏற்கனவே இலங்கை அணி 260/6 ரன் (கென்யாவுக்கு எதிராக, 2007, ஜோகனஸ்பர்க்) குவித்திருந்தது.
* டி-20 உலக கோப்பை தொடரின், பவர் பிளே (முதல் 6 ஓவர்) ஓவரில் இந்தியா 2வது அதிகபட்ச ரன்னை (80/1) நேற்று பதிவு செய்தது.
* நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி மொத்தம் 17 சிக்சர்களை பறக்க விட்டது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் இந்திய அணி பறக்க விட்ட அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன்பு 2024-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 15 சிக்சர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.