டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது: பாக். முன்னாள் வீரர் சொல்கிறார்

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
டி20 உலகக்கோப்பையை இந்தியா வெல்லாது: பாக். முன்னாள் வீரர் சொல்கிறார்
Published on

கராச்சி,

டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் கலந்துகொண்ட நிலையில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்லாது என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஆமிர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது அவர் தெரிவித்து இருப்பதாவது;

”நான் ஆராய்ந்ததில், ஒட்டுமொத்தமாக இந்தியா சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. நான் இன்னும் உங்களுக்கு சொல்கிறேன். கொஞ்சம் அவர்களுடைய பீல்டிங்கை பாருங்கள். மூன்று முதல் நான்கு கேட்ச்களை விடுகிறார்கள். பீல்டிங்கில் திணறுகிறார்கள். பும்ராவை தவிர மற்ற பந்து வீச்சாளர்களின் பந்து அடி விழுகிறது. ஒரு பவுலர் பலத்துடன் இந்தியா விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்று அல்ல. அவர்கள் இந்த டி20 உலகக் கோப்பையை வெல்லவும் மாட்டார்கள்.”

இவ்வாறு முகமது ஆமிர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com