பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி....ஆப்கானிஸ்தானில் கொண்டாட்டம்

இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா வெற்றி....ஆப்கானிஸ்தானில் கொண்டாட்டம்
Published on

இஸ்லாமாபாத்,

டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தது.இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியாவின் வெற்றியை ஆப்கானிஸ்தானில் ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com