4வது டி20: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி

இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
4வது டி20:  தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி
Published on

ஜோகன்ஸ்பெர்க்,

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில் அதில் அனைத்திலும் வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி ஜோகன்ஸ்பெர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்கள், தீப்தி சர்மா 36 ரன்கள், ரிச்சா கோஷ் 34 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக எலிசா மெரி மார்க்ஸ், கெய்லா ரினெக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்த்து. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா அதிகபட்சமாக 4 ஓவர்கள் வீசி 19 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com