இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு.. மழையால் ஓவர்கள் குறைப்பு

முத்தரப்பு மகளிர் ஒருநாள் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது.
இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு.. மழையால் ஓவர்கள் குறைப்பு
Published on

கொழும்பு,

இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. மே 11-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் விளையாடுகின்றன. கொழும்புவில் காலை 10 மணியளவில் இந்த ஆட்டம் தொடங்க இருந்தது.

இருப்பினும் கொழும்புவில் மழை பெய்ததன் காரணமாக இந்த ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்த்ப்ரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக இந்த போட்டி 39 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com